உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன தகன மேடை : தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன தகன மேடை : தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரம் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் நகராட்சி சுடுகாட்டில் நவீன தகனமேடை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நகராட்சி சார்பில் அல்லிகண்மாய் சுடுகாட்டில் 42 லட்ச ரூபாயில் 'பயோ காஸ்' தகன மேடை அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு பாதியில் நின்றது. இதுகுறித்து 'தினமலர்' இதழில் பல முறை போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது. நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் முயற்சியால் நவீன தகன மேடைநேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து நகராட்சி இன்ஜினியர் மகேந்திரன் கூறியதாவது: நகராட்சியில் அடிப்படை தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். நவீன தகனமேடையில் ஒரு நாளைக்கு எத்தனை பிணம் எரிக்கப்படுகிறது. எந்தளவு செலவாகிறது என்பதை கணக்கிட்டு அதன்பின் கட்டணம் நிர்ணயிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ