உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலச்சிறுபோது ரோடு சேதம்

மேலச்சிறுபோது ரோடு சேதம்

சிக்கல்: கடலாடி ஒன்றியம் மேலச்சிறுபோது கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ., தார் ரோடு சேதமடைந்துள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோட்டின் வழியாக சிக்கல், மேலச்சிறுபோது உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.பொட்டல்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்டாலின் கூறியதாவது: சேதமடைந்த நிலையில் உள்ள மேலச்சிறுபோது கிராம சாலை வழியாக நாள்தோறும் பள்ளி வாகனங்கள் அரசு பஸ்கள் செல்கின்றன. மழைக் காலங்களில் ரோடு சேறும் சகதியுமாக உள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் ரோடு அமைப்பதற்கு தனி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி