உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ரோட்டோரம் போக்குவரத்து சீரமைப்பு பணி

பரமக்குடியில் ரோட்டோரம் போக்குவரத்து சீரமைப்பு பணி

பரமக்குடி; பரமக்குடியில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலை ஓரங்களில் கயிறு கட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.பரமக்குடி ஐந்து முனை ரோடு துவங்கி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி வரை தொடர் நெரிசல் ஏற்படுகிறது. ஆர்ச், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பள்ளிகள், வணிக வளாகங்கள், மஹால், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. எனவே ரோட்டில் இருபுறமும் டூ வீலர், சரக்கு வாகனங்கள் முறையாக நிறுத்தப்படாமல் நெரிசலை ஏற்படுத்தி வந்தன. மேலும் மினி பஸ் உட்பட அரசு பஸ்கள் நெரிசலில் சிக்கி மக்கள் நடக்க வழியின்றி தவிக்கின்றனர்.இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ரோட்டில் இரண்டு ஓரங்களிலும் கயிறு கட்டி சீரமைத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். எனவே கடை உரிமையாளர்கள் மற்றும் பொருட்களை வாங்க வருவோர் வாகனங்களை முறையாக நிறுத்த வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சிறப்பு எஸ்.ஐ., பொன்ராஜ் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை