உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலுக்குள் மீனவர் வலையில் சிக்கியது ரூ.10 லட்சம் கஞ்சா

கடலுக்குள் மீனவர் வலையில் சிக்கியது ரூ.10 லட்சம் கஞ்சா

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் மீனவர்கள் வலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா சிக்கியது. பாசிபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் முத்துமாரி, மகன் ஜெய்கிந்த் நேற்று அதிகாலை நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் ஒரு சாக்குமூடை சிக்கியது. அதை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து தொண்டி மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் மூடையை பிரித்து பார்த்த போது பிளாஸ்டிக் பைகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா இருந்தது. மரைன் ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடக்கிறது. கடத்தல்காரர்கள் பாசிபட்டினத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்தி சென்ற போது படகில் இருந்து கஞ்சா மூடை தவறி விழுந்திருக்கலாம். அல்லது போலீசாருக்கு பயந்து மூடையை கடலில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை