மேலும் செய்திகள்
ரூ. 43.60 லட்சம் கஞ்சா; இலங்கையில் பறிமுதல்
13-May-2025
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.நேற்று முன்தினம் இரவு இங்கு துறைமுகம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கடற்கரையில் நின்ற சந்தேகத்துக்குரிய காரை சோதனையிட்டனர். இதில் 35 பார்சலில் 50 கிலோ கஞ்சா இருந்தது. இதனையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை நேற்று காலை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.இதனை காரில் கடத்தி வந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச்சேர்ந்த கடத்தல்காரர்கள் சகாயராஜ் 34, ராமச்சந்திரன் 26, குலோத்தமன் 40, சந்தோஷ் 37, சச்சின் 27, அர்த்தினாஸ் 41, ஆகிய 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.சேலத்தில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் - ஆலப்புழா ரயிலில், நேற்று காலை, 8:30 மணிக்கு, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பொதுப்பிரிவு பெட்டியின் கழிப்பறை அருகே, இரு பெரிய பைகள் கேட்பாரற்று கிடந்தன. அதை பிரித்து பார்த்தபோது, 10 பண்டல்களில், கஞ்சா இருந்தது. அதன் எடை, 13 கிலோ. கடத்தியவர் யாரென தெரியவில்லை. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.வீராணம் போலீசார், நேற்று முன்தினம், தாதம்பட்டியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த, வாய்க்கால்பட்டறையை சேர்ந்த மூவரை கைது செய்து, 10,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
13-May-2025