உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.3.67 கோடி கல்விக்கடன் வழங்கும் விழா

ரூ.3.67 கோடி கல்விக்கடன் வழங்கும் விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 263 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் கல்விக்கடன் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து மணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கினார். அவர் பேசியதாவது: மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.20 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 22 முகாம்கள் பல்வேறு கல்லுாரிகளில் நடத்தப்பட்டு இதுவரை 463 மாணவர்களுக்கு ரூ.15 கோடியே 43 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 263 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளனர். மாணவர்கள் கல்விக்கடன் திட்ட உதவிகளை பெற்று உயர்க்கல்வி வரை படிக்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட தொழில் மைய மேலாளர் திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக்கேயன், உதவி மேலாளர் அசோக் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி