மேலும் செய்திகள்
இலங்கையில் ரூ.22 லட்சம் கஞ்சா பறிமுதல் : கைது 4
30-Aug-2025
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60.80 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். மண்டபம் வேதாளை பகுதியில் மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேதாளை வடக்கு தெருவில் உள்ள மர்சுனா பீவி வீட்டில் அவர்கள் சோதனை நடத்தியதில் 40 மூடையில் 1600 கிலோ விரலி மஞ்சள் இருந்தது. இதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் இலங்கை மதிப்பு ரூ. 60.80 லட்சம். (இந்திய மதிப்பு ரூ.4 லட்சம்).மேல்விசாரணை நடக்கிறது. தட்டுப்பாடு இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விளைச்சல் குறைவு என்பதால் விரலி மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கிலோ மஞ்சள் ரூ.3800 விற்பதால் அங்குள்ள வியாபாரிகள் ஏற்பாட்டில் இலங்கை கடத்தல்காரர்கள் மண்டபம், பாம்பன் பகுதி கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு இதனை கடத்துகின்றனர்.
30-Aug-2025