ரூ.397 கோடி பயிர்கடன்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 52 ஆயிரத்து 861 விவசாயிகளுக்கு ரூ.397 கோடியே 16 லட்சம் பயிர் கடன் ஜன.,22 வரை வழங்கப்பட்டுள்ளது.தற்போது மீனவர், மாற்றுத்திறனாளிகள் கடன்களும் வழங்க ஜன.,27 முதல் பிப்.,5 வரை லோன் மேளா நடைபெறவுள்ளது. தகுதியுள்ளவர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர வேண்டும். இதன் மூலம் கடன்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளார்.