உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் எஸ்.காரைக்குடி கிராமம்

அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் எஸ்.காரைக்குடி கிராமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே எஸ்.காரைக்குடி கிராமத்தில் குடிநீர், ரோடு உட்பட அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்பட்டனர்.முதுகுளத்துார் அருகே எஸ்.காரைக்குடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது வரை எந்த பராமரிப்பின்றி இருப்பதால் குண்டும் குழியுமாக நடப்பதற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குடிநீருக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இரவு நேரத்தில் மின் விளக்கு முறையாக எரியாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பாரதிதாசன் கூறியதாவது:முதுகுளத்துார் ஒன்றியம் எஸ்.காரைக்குடி கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த ஐந்தாண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் முறையாக மின் விளக்குகள் எரிவதில்லை.குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு குடம் ரூ.12க்கு டிராக்டர் தண்ணீரை வாங்குவதற்காக நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராமத்தில் வேலைகள் செய்ததாக கூறி மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரியிடம் புகார் அளிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகிறோம்.ஊரணி வெட்டுவதாக கூறியும் முறையாக அமைக்கப்படவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்து முறையாக பணிகள் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தும் உரிய அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை