சாயல்குடியில் சபா கூட்டம்
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் சபா கூட்டம் நேற்று மதியம் நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் இந்திரா முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் செல்ல மாரியப்பா வரவேற்றார்.கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் வசதிகளை அமைத்து தர மனு அளித்தனர். பழுதான இரு மின்கம்பங்களை மாற்றிய பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மின்வாரியத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் மணிமேகலை, பாக்கியராஜ், வார்டு உறுப்பினர் சண்முகத்தாய், மணி, செல்லத்துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.