கமுதி அருகே 101 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்
கமுதி: கமுதி அருகே இடைச்சியூரணியில் பக்தர்கள் வழங்கிய 101 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்யப்பட்டது.கமுதி அருகே இடைச்சியூரணி கிராமத்தில் வல்லப கணபதி, இருளப்பசாமி, பாதாள பேச்சிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா, வைகாசி பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினமும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.பாதாள பேச்சி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக பக்தர்கள் சார்பில் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகள் பலியிட்டனர். பின்பு வல்லப கணபதி, இருளப்பசாமி, பாதாள பேச்சி அம்மன் உட்பட சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.சமைத்த உணவை படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் பொது அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.