கமுதக்குடி அரசு பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணர்வு
பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சக்தி தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியை தேவசேனா வரவேற்றார். பரமக்குடி மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,மகாலட்சுமி மாணவர்களிடம் பேசுகையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கினார். தானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவி என்பதில் பெருமை கொள்வதாகவும், கல்வி ஒன்றே நம்மை கரை சேர்க்கும். ஆகவே படிக்கும் வயதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். அறிவியல் ஆசிரியை ஜமுனா நன்றி கூறினார்.