| ADDED : பிப் 22, 2024 11:22 PM
தொண்டி : தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலோர பாதுகாப்பு ஒத்திகையான ஆப்பரேஷன் சஜாக் ஒத்திகை நடத்தினர்.கடல் வழியாக பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தேவிபட்டினம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீசார் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற கடலோரங்களில் ஆய்வு செய்தனர்.படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர். அந்நியர்கள், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். மீனவர்களிடம் சந்தேகப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.