உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூங்கில் கம்புகள் விற்பனை அமோகம்

மூங்கில் கம்புகள் விற்பனை அமோகம்

திருவாடானை: திருவாடானை பகுதியில் திருவிழாக்கள் களை கட்டியதால் கொட்டகை அமைக்க மூங்கில் கம்புகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.வீடுகள் கட்டமைப்பிற்கு மூங்கில் கம்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வேலி அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. திருவாடானை பகுதியில் கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளது. இதற்கு கொட்டகை அமைக்கவும் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கும் மூங்கில் கம்புகள் தேவைபடுவதால் திருவாடானை வாரச்சந்தையில் விற்பனை அமோகமாக உள்ளது.சிங்கம்புணரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளிமாவட்ட வியாபாரிகள் லாரிகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அளவுகளில் மூங்கில் கம்புகளைத் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். மூங்கிலின் தரம் மற்றும் நீளத்தைப் பொறுத்து ஒரு கம்பின் விலை 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சிலர் மொத்தமாகவும் மூங்கில்களை வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ