உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜி.எஸ்.டி., குறைப்பால் தீபாவளிக்கு ராமநாதபுரத்தில் ரூ.100 கோடிக்கு  விற்பனை

ஜி.எஸ்.டி., குறைப்பால் தீபாவளிக்கு ராமநாதபுரத்தில் ரூ.100 கோடிக்கு  விற்பனை

ராமநாதபுரம்: ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் விற்பனை அதிகரித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளது என மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தீபாவளியை முன்னிட்டு வியாபாரம் நன்றாக நடந்து வந்தது. மழை பெய்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்டது. ஆனால் சனி, ஞாயிறு இரு தினங்களும் மழை வராததால் வியாபாரம் சூடுபிடித்தது. பெரிய வியாபாரிகள் மட்டுமின்றி சாலையோர வியாபாரிகளும் இதனால் பலன் அடைந்தனர். சமீபத்தில் ஜி.எஸ்.டி., குறைந்துள்ளதால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் வழக்கத்தைவிட அதிகபொருட்களை வாங்குகின்றனர். தீபாவளியை முன்னிட்டு கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்கள் மட்டும் குறைந்தது ரூ.100 கோடி அளவில் வியாபாரம் நடந்துள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.20 கோடிக்கும்,பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதியில் ரூ.10 கோடி அளவில் வியாபாரம் நடந்தது. இந்த தீபாவளி வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை