உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார்த்திகை நிறைவு சோமவாரம் கோயில்களில் சங்காபிஷேகம்

கார்த்திகை நிறைவு சோமவாரம் கோயில்களில் சங்காபிஷேகம்

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு நேற்று சங்காபிஷேகம் நடந்தது.மூலவர் பூவேந்திய நாதருக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் ஹோமவேள்வி வளர்க்கப்பட்டு சிவலிங்க வடிவில் சங்குகள் வரிசையாக வைக்கப்பட்டு அவற்றில் புனித நீர் ஊற்றப்பட்டது. பூஜை நிறைவிற்கு பின் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டி மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.திருப்புல்லாணியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாபு சாஸ்திரி, வெங்கடேஷ் சாஸ்திரி ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை தேவகோட்டை நகரத்தார் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.முதுகுளத்துார்: பத்ரகாளியம்மன் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திரிபுர சுந்தரேஸ்வரர் சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நந்தி பகவான் முன்பு 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பின் திரிபுர சுந்தரேஸ்வரருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக கோயில் முகப்பு மண்டபத்தில் யாக பூஜை வேள்விகள் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.தொடர்ந்து மூலவர் மற்றும் நந்திக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக பெண் பக்தர்கள் கோயில் முன்பு தீபம் ஏற்றி கோபுர தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி