துாய்மை பணியாளர் மருத்துவ முகாம்
கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் பணி செய்யும் துாய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் பி.எஸ்.எம்.மருத்துவமனையில் நடந்தது. கீழக்கரை நகராட்சியில் பணிபுரியும் 90 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஸ்வட்ஷா சேவா திட்டத்தில் ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. கீழக்கரை நகராட்சி தலைவர் செகனாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உட்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.