உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் சட்டக்கல்லுாரியில்   மரக்கன்று நடவு செய்யும் பணி 

ராமநாதபுரம் சட்டக்கல்லுாரியில்   மரக்கன்று நடவு செய்யும் பணி 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சட்டக்கல்லுாரி மாணவர்கள் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.துாய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்தது. முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜிப்பிரியா வரவேற்றார்.உதவிப் பேராசிரியர்கள் ஜீவரத்தினம், முத்துக்குமார், கவுரவ பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் உறுதி மொழியேற்று மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ