உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாள் விழா உலக நன்மைக்காக மகா ருத்ர ஜெபம்

சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாள் விழா உலக நன்மைக்காக மகா ருத்ர ஜெபம்

ராமேஸ்வரம்: சத்ய சாய்பாபா 100வது பிறந்த நாளை முன்னிட்டு சத்ய சாய்பாபா சேவா அமைப்பினர் சார்பில் ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக தொடர்ந்து மூன்று மணிநேரம் மகா ருத்ர ஜபம் நடந்தது. சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாளை அடுத்தாண்டு நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாட உள்ளனர். இதன் முன்னோட்டமாக நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் சத்ய சாய்பாபா சேவா அமைப்பினர் மகா ருத்ர ஜபம் நடத்தி வருகின்றனர். இதன்படி அவற்றில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோசுவாமி மடத்தில் நேற்று உலக நன்மைக்காக மகா ருத்ர ஜபம் நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 1500க்கும் மேலான பக்தர்கள் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை ருத்ர ஜெபம் நடத்தி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை