உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி அரசு பள்ளிக்கு முன் வேகத்தடை தேவை

சாயல்குடி அரசு பள்ளிக்கு முன் வேகத்தடை தேவை

சாயல்குடி: சாயல்குடி-துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். மதியம் உணவு இடைவேளை நேரம், பள்ளி மாலையில் விடும் போதும் கூட்டமாக மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பும் வேளையில் கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வரும் டூவீலர், கார் மற்றும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் நலன் கருதி இருபுறங்களிலும் ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய வேகத்தடை அமைக்க வேண்டும். இந்த ரோட்டில் அடிக்கடி டூவீலர் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை