உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமன்கோட்டையில் பள்ளி ஆண்டு விழா

காமன்கோட்டையில் பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி: பரமக்குடி அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் செல்வமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. மேலும் கபடி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு ஆசிரியர்கள் பரிசளித்து கவுரவித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் சண்முகநாதன், தண்டாயுதபாணி, உடற்கல்வி ஆசிரியர் அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருப்பசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ