| ADDED : பிப் 21, 2024 11:03 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் சுதாகர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பகவதி குமார் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியை மெசியானந்தி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் வெங்கடாஜலபதி, ஊராட்சி தலைவர் ஜெயபாரதி, தொழில் அதிபர்கள் மேழிச் செல்வம், சிவக்குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுதா, உப தலைவர் மீனாள், ஆசிரியர்கள் தங்கபாண்டியன், ராஜசேகரன், பாபு செல்வராஜ், சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.