உள்ளூர் செய்திகள்

அறிவியல் மாநாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் லியோன் தலைமை வகித்தார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். ராமநாதபுரம் சப் கலெக்டர் (பயிற்சி) சினேகா மாநாட்டை துவக்கி வைத்தார். நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர். மாணவர்கள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நேஷனல் அகாடமி பள்ளி முதல்வர் ராஜமுத்து, அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் நவனீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !