அறிவியல் கண்காட்சி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. முதல்வர் லீமா ரோஸ் தலைமை வகித்தார். சூசையப்பர் பட்டினம் சகாயராணி பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியை ஜூலியஸ் தவமணி தேவி பேசினார். பிரிட்டோ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் நஸ்ருதீன் வாழ்த்துரை வழங்கினார். கண்காட்சியில் மாணவர்களின் 200க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சிறந்த 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.