உள்ளூர் செய்திகள்

 சாரணர் பயிற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்று கல்வி மாவட்ட சாரணர், சாரணியர் மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். சாரணர் இயக்க மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். தீயணைப்பு அலுவலர் கேசவன் கூறியதாவது: இடி மின்னலின் போது வெளியே செல்லக் கூடாது. மரங்கள், அலைபேசி டவர்கள் அருகில் நிற்கக்கூடாது. ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கக் கூடாது. மின் ஒயர்கள் அருகில் செல்லக் கூடாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி