மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
16-Jun-2025
ராமேஸ்வரம்:சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் பாம்பன் மீனவர்கள் அச்சத்தில் மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.இரு நாட்களாக மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இச்சூழலில் மீன்பிடிக்க செல்வது சிரமம். நடுக்கடலில் விபரீதம் ஏற்படும் எனக் கருதிய பாம்பன் மீனவர்கள் பெரும்பாலானோர் அச்சத்தில் மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பனில் உள்ள 96 விசைப்படகுகளில் 90 படகுகள் வரை கடலுக்கு செல்லும். நேற்று 32 படகுகள் மட்டுமே சென்றன.
16-Jun-2025