உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்ற கலைக்குழு தேர்வு

நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்ற கலைக்குழு தேர்வு

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத்துறை சார்பில், சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்பதற்கான கலைக்குழு தேர்வு நடந்தது. பொங்கல் விழாவின் போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக்கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னையில் 18 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 8 மாவட்டங்களில் கலைத்திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் கலைக்குழுக்கள் தேர்வு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் சீத்தகாதி சேதுபதி மைதானத்தில் நடந்தது.இதில் ஒவ்வொரு கலைக்குழுவும் 5 நிமிடம் வீடியோ பதிவு செய்து, கலைப்பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். பின் 8 மாவட்டங்களில் நடக்கும் சங்கமம் விழாவில் பங்கேற்பார்கள். தேர்வாகும் குழுவினர் 2026 ல் சென்னையில் நடக்கும் சங்கமம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெறுவார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் பொறுப்பு ரமிசாபேகம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் லோகசுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை