உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில், 'ஏன் தெரு உணவு பாதுகாப்பானது அல்ல,' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சுமையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் ராஜம்மாள் வரவேற்றார். துபாய் யுனைடெட் அராபி எமிரேட்ஸ் உணவு பாதுகாப்பு மற்றும் நிபுணர் முகம்மது ஜமால் கான் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார். உணவில் ஏற்படும் நன்மை, தீமைகள் மற்றும் அதில் உள்ள அறிவியல் சார்ந்த தகவல்கள் விளக்கமளிக்கப்பட்டது. துணை முதல்வர் சீனி ரஹ்பு நிஷா உட்பட பலர் பங் கேற்றனர். பேராசிரியர் ஸ்ரீமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி