மேலும் செய்திகள்
இந்திய செஞ்சிலுவை சங்கம் மாணவர்களுக்கு போட்டிகள்
14-Sep-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை -அறிவியல் மகளிர் கல்லுாரியில் நான் முதல்வன் பாடத்திட்டத்தில் இளங்கலை நுண்ணுயிரியல் துறையில் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு கருத்தரங்கு போட்டி நடந்தது. இதில் மாணவிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மைக்ரோ சாப்ட் பவர் பாயின்ட் பயன்படுத்தி நோய்க் கிருமிகள் தோன்றும் முறை, கண்டறியும் முறை, சிகிச்சை முறை, தடுப்பு முறை மற்றும் மருத்துவ குறியீட்டு முறை பற்றி விளக்கினர்.கல்லுாரித் தாளாளர் வேலு மனோகரன் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். செயலாளர் சகுந்தலா, முதல்வர் ரஜனி, ஆங்கில துறை தலைவர் ஷைனி, நான் முதல்வன் மருத்துவ குறியீட்டு துறை பயிற்சியாளர் இலக்கியா ஆகியோர் பங்கேற்றனர். நுண்ணுயிரியல் துறை தலைவர் மோகனபிரியா, நான் முதல்வன் பொறுப்பாசிரியர் பவித்ரா விழா ஏற்பாடுகளை செய்தனர்.
14-Sep-2024