உள்ளூர் செய்திகள்

பல மணி நேர மின் தடை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் கடந்த சில வாரங்களாக பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் வர்த்தகர்களும், பொதுமக்களும் கடுமையான சிரமத்தை சந்திக்கின்றனர்.இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் அறிவிக்கப்படாத நிலையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை