உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெடுஞ்சாலையோரம் தேங்கும் கழிவுநீர்; விபத்து அச்சத்தில் மக்கள்

நெடுஞ்சாலையோரம் தேங்கும் கழிவுநீர்; விபத்து அச்சத்தில் மக்கள்

பரமக்குடி : பரமக்குடி ஓட்டப் பாலம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் மழைநீர் தேங்கி கழிவாக மாறி வருவதால் மக்கள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர். பரமக்குடி ஓட்டப்பாலம் துவங்கி ஐந்து முனை ரோடு வரை நெடுஞ்சாலை ஓரங்களில் வசந்தபுரம், பாரதி நகர் பகுதி உள்ளது. இதன்படி பல நுாறு வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் என ஏராளமாக இருக்கிறது. இதே போல் எல்.ஐ.சி., கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த ரோட்டில் இரு புறங் களிலும் 30 அடிக்கு மேல் அரசு இடம் உள்ளது. இந்நிலையில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வழிந்தோட இரு புறங்களிலும் பெரிய வாறுகால்கள் அமைக்கப்பட்டது. ஆனால் ரோட்டில் இருந்து மழை நீர் வழிந்தோட முடியாமல் ஒட்டுமொத்தமாக இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டது. இதனால் ஒவ்வொரு மழையின் போதும் ரோட்டில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது. தொடர்ந்து நாள் கணக்கில் தண்ணீர் தேங்குவதால் கழிவாக மாறி பாதசாரிகள், மாணவர்கள் என போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் தொற்று நோய் பீதியில் மக்கள் உள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், தண்ணீர் வழிந்தோடி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை