கமுதி அருகே மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு
கமுதி; கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பருத்தி விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.கமுதி அருகே செங்கப்படையைச் சேர்ந்த மகேஸ்வரி ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல்ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தன. அப்போது கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பருத்தி விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருந்த 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.இதுகுறித்து கமுதி போலீசில் மகேஸ்வரி அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். 4 ஆடுகள் இறந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என்று மகேஸ்வரி கோரிக்கை விடுத்தார்.