மேலும் செய்திகள்
பரமக்குடி பகுதியில் முளைப்பாரி விழா
27-Sep-2024
பரமக்குடி : பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மணி நேரம் தண்ணீர் வீணாக ஓடிய நிலையில் அருகில் உள்ள கடைகளில் புகுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.பரமக்குடி நகராட்சி காட்டு பரமக்குடி மின்வாரிய அலுவலகம் எதிரில் நேற்று காலை 12:00 மணிக்கு திடீரென தண்ணீர் பொங்கியது. தொடர்ந்து அருகில் உள்ள கடைகளில் வெள்ளம் போல் நீர் புகுந்ததால் செய்வதறியாது திகைத்தனர்.பின்னர் அருகில் இருந்தவர்கள் தண்ணீரின் திசையை மாற்றி அமைக்க முயன்ற போதும் அதிகப்படியாக தண்ணீர் பொங்கியதால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மாலை வரை தண்ணீர் பெருக்கெடுத்த நிலையில் எந்த துறை அதிகாரிகளும் சீரமைக்க வரவில்லை. தற்போது மழையின்றி குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில் இது போன்ற உடைப்புகளால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவது தொடர்கிறது. மேலும் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் நகராட்சியா, பொதுப்பணி துறையா என அறிய முடியாத சூழலில் பல மணி நேரம் குடிநீர் வீணாகியது மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அருகில் உள்ளவர்கள் அனைத்து துறையினருக்கும் தகவல் தெரிவித்தும் உடனடி சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை என தெரிவித்தனர். ஆகவே துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27-Sep-2024