உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் திருட்டு

கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் திருட்டு

முதுகுளத்துார்; முதுகுளத்துார் ஸ்டேட் பாங்க் அருகே உள்ள மளிகை மொத்த வியாபார கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் பணம், பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். முதுகுளத்துார் ஸ்டேட் பாங்க் அருகே மளிகை மொத்த வியாபார கடை நடத்தி வருபவர் ராமபாண்டி. நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடையின் கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று பார்த்த போது ரூ.1.40 லட்சம் பணம், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள சிக்ரெட் உள்ளிட்ட மளிகை பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து முதுகுளத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். போலீசார் சிசிடிவி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ