உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால்நீண்ட நேரம் காத்திருந்துமக்கள் சிரமப்படுகின்றனர்.உத்தரகோசமங்கை சுற்றுவட்டார கிராமங்களான களரி, கொம்பூதி, வேளானுார், கீழச்சீத்தை, மேலச்சீத்தை, களக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் தினமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.நாள்தோறும் புற நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மூன்று டாக்டர் இருக்க வேண்டிய சூழ்நிலையில் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் மாற்று பணியாக வெளியில் சென்று விடுகிறார்.பெரும்பாலும் விவசாயகூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் விஷக்கடி, நாய்க்கடி, காய்ச்சல் தலைவலி உள்ளிட்டவைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோறும் வருகின்றனர். இந்நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் 15 முதல் 20 கி.மீ., தொலைவில் உள்ள கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை