உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் கோடி தீர்த்த ஸ்டால் குறைவு: பக்தர்கள் திணறல்

ராமேஸ்வரம் கோயிலில் கோடி தீர்த்த ஸ்டால் குறைவு: பக்தர்கள் திணறல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடி தீர்த்தம், பிரசாதம் விற்கும் ஸ்டால் குறைவாக உள்ளதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்கினர்.ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் 22வது கோடி தீர்த்தம், பிற தீர்த்தங்களில் உள்ள நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தை 500 மி.லி., பாட்டில் அடைத்து ரூ.20 க்கும், கோயில் மடப்பள்ளியில் தயாரித்த அதிரசம், முறுக்கு, லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை ரூ.50, ரூ.60க்கு கோயில் நிர்வாகம் விற்கிறது.இதனை விற்கும் இரு ஸ்டால்கள் அம்மன் சன்னதி முன்உள்ள பிரகாரத்தில் உள்ளது. ஆனால் நேற்று விடுமுறை நாள் என்பதால் தீர்த்தம், பிரசாதம் வாங்க பக்தர்கள் ஸ்டால்கள் முன்பு முண்டியடித்து நின்றனர். விடுமுறை நாட்களில் இந்த ஸ்டால்கள் போதுமானதாக இல்லாததால், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே விடுமுறை நாட்களில் கூடுதல் ஸ்டால் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ