மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி
09-Sep-2025
கமுதி:கமுதி அருகே டூ - வீலரில் சென்ற எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன், 54. கமுதி அருகே உப்பங்குளம் கிராமத்தில், ஒரு பெண் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக எஸ்.ஐ., முருகனுக்கு மொபைல் போனில் கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து சாதாரண உடையில் டூ - வீலரில் சென்ற முருகனை, உப்பங்குளம் அருகே அடையாளம் தெரியாத இருவர் வழிமறித்து அரிவாளால் வெட்டி, தப்பினர். தலையில் காயமடைந்த முருகன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.ஐ., முருகன் புகார் அளிக்காததால் நேற்றுமாலை வரை, வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
09-Sep-2025