உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சித்த மருத்துவ  காலியிடங்களை  நிரப்பாததால் அவதி

சித்த மருத்துவ  காலியிடங்களை  நிரப்பாததால் அவதி

ராமநாதபுரம்:சித்த மருத்துவப்பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்திய ஓமியோபதி மருத்துவத்துறையின் கீழ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவதற்கு பார்மசிஸ்டுகள், உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தேசிய ஊரக சுகாதார பணிகள் திட்டத்தில் தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ள அந்தந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் சில மாவட்ட சித்த மருத்துவர்கள் மட்டுமே புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் நியமிக்க முயற்சி எடுக்கவில்லை. டாக்டர் பணியில் இருப்பவரே பார்மசிஸ்ட், உதவியாளர்கள் பணியையும் செய்யும் நிலை உள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையானது காலி பணியிடங்களை நிரப்ப கால நிர்ணயம் செய்து மாவட்ட சித்த மருத்துவர்களுக்கு உத்தரவிட வேண்டும். பணியிடம் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் கணக்கில் இருந்து அகற்றப்படுகிறது. பல சித்த மருத்துவ பிரிவுகளில் இது போல் பணியிடங்கள் அரசால் அகற்றப்பட்டு பணியிடம் இருந்தற்கான தடயமே இல்லை. கொரோனா பேரிடர் காலங்களில் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்த மருத்துவ ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ