உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாயை அவதுாறாக பேசியவரை வெட்டிக்கொன்ற மகன் கைது

தாயை அவதுாறாக பேசியவரை வெட்டிக்கொன்ற மகன் கைது

பரமக்குடி,: தாயை அவதுாறாக பேசியதால், லோடுமேனை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அண்ணாநகரை சேர்ந்த லோடுமேன் சித்திரை கண்ணன், 49. இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு, பரமக்குடி சந்தை பகுதியில் நின்ற போது, இளைஞர் ஒருவர் வாளால் வெட்டியதில் அவர் இறந்தார். போலீசார், பார்த்திபனுார் அருகே பஸ்சில் சென்ற பரமக்குடி, அங்குநகரைச் சேர்ந்த அருண்குமார், 28, என்பவரை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'சித்திரை கண்ணன், 2019ல் அருண்குமாரின் தாய் வசந்தியிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருண்குமாரின் அம்மாவை சித்திரை கண்ணன் அவதுாறாக பேசியுள்ளார். இதனால் அருண்குமார், சித்திரை கண்ணனை கொலை செய்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை