உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகூர்த்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்

முகூர்த்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்

திருவாடானை: முகூர்த்த நாள்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆடி முடிந்து ஆவணி பிறந்துள்ளதால் இனி வரும் மாதங்களில் முகூர்த்த நாட்கள் அதிகமாக உள்ளது. இந்த நாள்களில் திருமணம், சடங்கு, கிரகபிரவேசம் போன்ற பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதனால் பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். வழக்கமாக செல்லும் பஸ்களில் பயணிகள் ஏறி செல்ல முடியாத வகையில் கூட்டம் கூடுகிறது. எனவே முகூர்த்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கூறுகையில், திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டுகளில் வழக்கமாக செல்லும் பஸ்களில் மார்கழி, ஆடி மாதங்களை தவிர மற்ற மாதங்களில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் முகூர்த்த நாள்களில் பல மடங்கு அதிகரிக்கும் பயணி களால் நெரிசல் அதிகமாக உள்ளது. முதியவர்கள், கைக் குழந்தையுடன் செல்லும் பெண்கள் பஸ்களில் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் கடும் வெயிலால் அனல் காற்று வீசுவதால் முதியவர்கள் மயக்கமடைகின்றனர். விழாக்களுக்கு செல்லும் பெண்கள் தங்க நகைகளை அணிந்து செல் கின்றனர். கூட்ட நெரிசலை குறிவைத்து பெண் திருடர்கள் தங்கள் கை வரிசையை காட்டுகின்ற னர். எனவே முகூர்த்த நாட்களில் அரசு போக்கு வரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை