உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு

பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு

திருவாடானை : மத்தியரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பி.எம்., கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாயிகள் மே 31 வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம் என, திருவாடானை வேளாண் உதவி இயக்குநர் தினேஸ்வரி கூறினார்.அவர் கூறியதாவது- இத்திட்டத்தின் பயன்பெறும் விவசாயிகள் சிறப்பு முகாம் மே 31 வரை வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம், பொது சேவை மையம், தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. நில உடமை பதிவேற்றம் மற்றும் இ.கே.ஒய்.சி பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் பொது சேவை மையம், வேளாண்மை விரிவாக்கம் மையத்தை அனுகலாம். நில உடமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டும் வரும் ஜூன் மாதத்தில் 20வது தவணை விடுவிக்கப்படும்.வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தொடர்புடைய வங்கிக் கிளையில் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் அணுகி இணைக்க வேண்டும்.2019 பிப்., 1ம் தேதியில் நில பட்டா வைத்திருக்கும் தகுதி உடைய பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண், நில உடமை ஆவணங்கள், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி பி.எம்., கிசான் திட்ட வலைதளத்தில் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை