ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின் வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் ஐப்பசி மாத சிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணைக்குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, யாகசால பூஜைகள் நடந்தது., படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது.