உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமர் பாலம் காண சுற்றுலா படகு மே 15ல் துவக்குகிறது இலங்கை

ராமர் பாலம் காண சுற்றுலா படகு மே 15ல் துவக்குகிறது இலங்கை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி- இலங்கை இடையே ராமர் அமைத்த பாலத்தை கண்டு தரிசிக்க மே 15ல் இலங்கை அரசு சுற்றுலா படகு சவாரியை துவக்குகிறது.தனுஷ்கோடி- இலங்கை இடையே பாலம் அமைத்து சீதையை ராமர் மீட்டு வந்தது ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த இப்பாலத்தை ஹிந்துக்கள் புனித பாலமாக கருதுகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள் ராமர் பாலத்தை கண்டு ரசித்தும், தரிசித்தும் சென்றனர்.தனுஷ்கோடி அரிச்சல்முனை, இலங்கை தலைமன்னார் இடையே 29 கி.மீ., உள்ள கடல் பகுதியில் ராமர் பாலம் மீது 14 முதல் 18 மணல் தீடைகளாக உள்ளது. அரிச்சல்முனையில் இருந்து 5 முதல் 6 தீடையுடன் இந்திய எல்லை முடிந்துவிடும். மீதமுள்ள தீடைகள் இலங்கை வசம் உள்ளது.ராமர் பாலத்திற்கு படகு இயக்க, இலங்கை மன்னார் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா, பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் மே 15 முதல் தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தனர். இதன் மூலம் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ