உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் அபாயம்

கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் அபாயம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சியில் திடல் ஊருணி அருகே கழிவுநீர் கால்வாய் முழுவதும் அமைக்கப்படாமல் இருப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திடல் ஊருணி அருகே 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் முழுவதும் அமைக்கப்படாமல் பாதியிலே விட்டுள்ளனர். இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து குளம் போல் தேங்குகிறது. துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திடல் ஊருணி அருகே கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி குளம் போல் நிற்பதால் தொற்று நோய் ஏற்படுகிறது. ரோடு வசதி இல்லாததால் மழைக்காலத்தில் நடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கழிவுநீர் கால்வாய் முழுமையாக அமைக்கவும், புதிய ரோடு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை