உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை முதல் துவக்கம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை முதல் துவக்கம்

திருவாடானை; தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் ஏற்கனவே ஜூலையில் திருவாடானை, புதுப்பட்டினம், வெள்ளைய புரம், பாண்டுகுடி மற்றும் தொண்டி பேரூராட்சியில் நடந்தது. நாளை (ஆக.,1) முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்குகிறது. ஆக.,1ல் கடம்பூர், பழங்குளம், துத்தாகுடி ஆகிய ஊராட்சிகளுக்கு கடம்பூர் சேவை மையத்திலும், மறுநாள் கல்லுார், ஓரிக்கோட்டை, பி.கே. மங்கலம் ஆகிய ஊராட்சி களுக்கு சின்னக்கீர மங்கலத்திலும், 8ல் முகிழ்த்தகம், நம்புதாளை, திருவெற்றியூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நம்புதாளை புயல் காப் பகத்திலும், 12ல் கொடிப்பங்கு, பனஞ்சாயல், வட்டாணம் ஆகிய ஊராட்சிகளுக்கு வட் டாணத்திலும் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என திருவாடானை தாசில்தார் ஆண்டி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை