தொண்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
தொண்டி: தொண்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தனியார் பள்ளியில் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.8.87 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 16 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைக்கபட்டது. மேலும் ரூ.32.70 கோடியில் 11 புதிய மருத்துவ கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான திட்டப்பணிகள் துவக்கி வைக்கபட்டது. கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன. ஏராளமானோருக்கு சிகிச்சை அளிக்கபட்டது.