மேலும் செய்திகள்
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
11-Oct-2025
ராமநாதபுரம்: தேசிய பெண் குழந்தை தினமான ஜன.,24 ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் கீழ்க்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆகிய தகுதியினை உடைய பெண் குழந்தைகள் நவ.,30க்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04567--230 466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.--------
11-Oct-2025