மேலும் செய்திகள்
மாநில அளவில் கலாசார விழா
24-Sep-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செய்யது அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.இ.எம்.அப்துல்லா நினைவாக அக்., 11, 12ல் மாநில, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் மாநில அளவில் ஆண்கள் அணியினரும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பெண்கள் அணியினரும் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து பேசியதாவது: விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கூடுதலாக இடம் ஒதுக்கி முன்னுரிமையை அரசு மற்றும் தனியார் துறைகள் வழங்கி வருகிறது. மாணவர்கள் விளையாட்டு துறைகளிலும் உங்களின் கவனத்தை செலுத்தி வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி முதலிடம், கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி இரண்டாமிடம், இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. பெண்களுக்கான பிரிவில் ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல் இடத்தையும், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், நம்மாழ்வார் வேளாண் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.7000, 3ம் பரிசாக ரூ.5000 வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவிற்கு முதல் பரிசாக ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3வது பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
24-Sep-2025