மாநில சாதனை
ராமநாதபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பவினேஷ் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாமிடம், மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். அவரை பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்தினார். ஆண்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர் நாகலட்சுமி, பெண்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர் தேவகி மற்றும் மாணவரின் தாய் விமலா உடனிருந்தனர்.