மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசியன் பலி
05-Jan-2025
தேவிபட்டினம்: எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் திருவாடானை சட்டசபை தொகுதி கூட்டம் தேவிபட்டினத்தில் தொகுதி பொறுப்பாளர் முகமது ஹனீப் தலைமையில் நடைபெற்றது. தொகுதி துணைத் தலைவர் மூர்த்தி வரவேற்றார். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர்களின் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் ஆவரேந்தல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பலியான பாண்டித்துரை குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதி செயலாளர் ஹமீது இப்ராஹிம் நன்றி தெரிவித்தார்.
05-Jan-2025